நடிகை சமந்தாவின் ‘மா இன்டி பங்காரம்’ படத்தின் டீஸர் ட்ரெய்லர் அப்டேட் வெளியீடு!

நட்சத்திர நடிகை சமந்தா, கடைசியாக ‘சுபம்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம், அவர் தயாரிப்பாளராக அறிமுகமான முதல் படமாக அமைந்தது.

ஆனால், சமந்தா தயாரிப்பதாக முதன்முதலில் அறிவிக்கப்பட்ட படம் ‘மா இன்டி பங்காரம்’. கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்த நிலையில், இப்படத்திற்கான சமந்தாவின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. அதனுடன், இப்படத்தின் டீசர் டிரெய்லர் வெளியாகும் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படத்தின் டீசர் டிரெய்லர் வருகிற 9-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது. நந்தினி ரெட்டி இயக்கும் இந்தப் படத்தில், சமந்தாவுடன் நடிகர் குல்ஷன் தேவையா, மூத்த நடிகை கவுதமி, மஞ்சுஷா மற்றும் திகந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading