நடிகை தமன்னா தற்போது பெரும்பாலும் பாலிவுட் சினிமாவை மையமாக வைத்து தனது திரைப்படப் பயணத்தை தொடர்கிறார். தமிழில் அவர் கடைசியாக நடித்த படம் ‘அரண்மனை – 4’. அந்தப் படத்திற்குப் பிறகு தொடர்ந்து இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில், பல படங்களில் சிறப்பு பாடல்களில் நடனமாடி வந்தார். தற்போது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடிக்கத் தொடங்கியுள்ள தமன்னா, தனது நடிப்பு பயணத்தை புதிய கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் தமன்னா கலந்துகொண்டு மேடையில் நடனமாடினார். அந்த நிகழ்ச்சியின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக வைரலானது. அந்த நடன நிகழ்ச்சிக்காக அவர் பெற்ற சம்பளம் குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, சுமார் 6 நிமிடங்கள் நடனமாடுவதற்காக ரூ.6 கோடியை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், சினிமா படங்களைத் தாண்டி நடன நிகழ்ச்சிக்காக மட்டும் அதிக சம்பளம் பெறும் நட்சத்திரமாக தமன்னா தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
