ஓடிடி தளத்தில் ட்ரெண்டிங்-ல் முதலிடத்தை பிடித்த ‘பகவந்த் கேசரி’ திரைப்படம்…

2023ஆம் ஆண்டு வெளியான தெலுங்குத் திரைப்படமான ‘பகவந்த் கேசரி’ தற்போது மீண்டும் ஓடிடி தளங்களில் முதலிடத்தில் டிரெண்டாகி வருகிறது. அனில் ரவிப்புடி இயக்கத்தில், இசையமைப்பாளர் தமன் இசையில், நடிகர் பாலகிருஷ்ணா, நடிகை ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம், வெளியான போது ரூ.130 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்து மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படத்தின் ரீமேக் திரைப்படமாகத்தான் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

‘ஜனநாயகன்’ படம் அதிகாரப்பூர்வமாக ரீமேக் என படக்குழுவினர் அறிவிக்கவில்லை என்றாலும், படத்தின் டிரைலர் வெளியான பிறகு ‘பகவந்த் கேசரி’ படத்தில் இடம்பெற்ற முக்கியமான காட்சிகள் இதே படத்தில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாகவே, ‘ஜனநாயகன்’ படம் ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் தான் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கின. பாலகிருஷ்ணா நடித்த பல படங்கள் ஏற்கனவே தமிழில் டப்பிங் செய்யப்பட்டு திரையரங்குகளிலும், அதன் பின்னர் ஓடிடி தளங்களிலும் வெளியாகி, தமிழ்ச் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதனால் அவரது படங்களுக்கு தமிழிலும் தனி ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என்ற தகவல் அதிகமாக பேசப்பட்டு வரும் சூழலில், அந்த படத்தை பார்க்கும் ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே, பலர் தற்போது ஓடிடி தளத்தில் ‘பகவந்த் கேசரி’ படத்தை தேடி பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக, அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ‘பகவந்த் கேசரி’ படம் தற்போது டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading