தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசனை கதாநாயகனாக வைத்து ‘அரசன்’ என்ற திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வடசென்னைப் பின்னணியில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு, இந்த திரைப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இப்படம் குறித்து தயாரிப்பாளர் தாணு அளித்த பேட்டியில், ‘அரசன்’ படத்தின் கதைக்களம் முழுவதுமாக வடசென்னை உலகத்தையே அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளதாக தெரிவித்தார்.
ஆனால், தனுஷ் இந்த படத்தில் இல்லை. ஏனெனில், தனுஷ் ஜெயிலில் இருந்தபோது இநத கதைக்களம் நடைபெறுகிறது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு சிம்பு சரியான நேரத்திற்கு வருகிறார். கேரவனுக்கு எல்லாம் சிம்பு செல்வது இல்லை, நேரடியாக படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் என தெரிவித்துள்ளார்.
