ரீ ரிலீஸாகிறது அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

2011ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர்கள் அஜித்குமார், அர்ஜுன், திரிஷா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துத் திரைக்கு வந்த படம் ‘மங்காத்தா’. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த திரைப்படம், பணக்கடத்தல் சம்பந்தப்பட்ட கதையை மையமாகக் கொண்டு உருவாகி, வெளியான போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

சமீப காலமாக பழைய வெற்றிப் படங்களை மீண்டும் திரையரங்குகளில் ரீரிலீஸ் செய்யும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், அஜித் நடித்த ‘அட்டகாசம்’ படம் அண்மையில் மீண்டும் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அடுத்ததாக ‘மங்காத்தா’ படத்தையும் ரீரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, வரும் ஜனவரி 23ஆம் தேதி ‘மங்காத்தா’ படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ரீரிலீஸைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதத்தில் நடிகர் அஜித் மற்றும் ஷாலினி இணைந்து நடித்த ‘அமர்க்களம்’ திரைப்படமும் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading