தனுஷ்கோடிக்கு பைக்கில் பயணம் செய்த நடிகை மஞ்சு வாரியர்… வைரலாகும் கிளிக்ஸ்!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை மஞ்சு வாரியர், ‘அசுரன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘துணிவு’, ‘வேட்டையன்’, ‘விடுதலை 2’ உள்ளிட்ட பல முக்கியமான தமிழ்த் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். குறிப்பாக ‘துணிவு’ படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து நடித்தபோது, அஜித் மற்றும் அவரது குழுவினருடன் சேர்ந்து நீண்ட தூர பைக் பயணங்களில் பங்கேற்றார். அந்த அனுபவத்தின் மூலம் பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வம் ஏற்பட்ட மஞ்சு வாரியர், முறையாக பைக் ஓட்டக் கற்றுக்கொண்டதுடன், விலை உயர்ந்த ஒரு பைக்கையும் தனிப்பட்ட முறையில் வாங்கி வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவ்வப்போது பல்வேறு இடங்களுக்கு பைக்கில் பயணம் மேற்கொள்ளும் மஞ்சு வாரியர், அந்த பயணங்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து பகிர்ந்து வந்தார். அந்த வகையில், புத்தாண்டை முன்னிட்டு ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் சாலையில் பைக் பயணம் மேற்கொண்டுள்ளார். 

இந்த பைக் பயணத்தைப் பற்றிய ஒரு வீடியோவையும் அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு, “எவ்வாறு இருந்ததோ, எவ்வாறு இருக்கிறதோ, எவ்வாறு இருக்கப் போகிறதோ அனைத்திற்கும் நன்றி என்ற புத்தாண்டு ஸ்லோகனையும் பதிவிட்டு, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் மஞ்சு வாரியர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading