நான் என் வயதை குறித்து ஒருபோதும் கவலை படவில்லை – நடிகை காஜல் அகர்வால்!

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்பட உலகங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், திருமணத்திற்குப் பிறகும் தனது வசீகரமான தோற்றத்தாலும், இளமைத் ததும்பும் அழகாலும் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். வயது கூடினாலும் கூட, அதே பளபளப்பான அழகுடன் இளமையாக தோற்றமளிக்கும் காஜல் அகர்வால், தனது இளமை தோற்றத்தின் ரகசியம் குறித்து சமீபத்தில் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தற்போது தமக்கு 40 வயது ஆகிவிட்டதாகவும், பரபரப்பான படப்பிடிப்பு பணிகளுக்கு இடையிலும் உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகளை தவறாமல் செய்ய வேண்டும் என்று தன்னைச் சுற்றியவர்கள் அறிவுறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். படப்பிடிப்புகள் காரணமாக எவ்வளவு பிஸியாக இருந்தாலும், யோகா மற்றும் உடற்பயிற்சிகளை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை என்றும், தினமும் உடலுக்கு தேவையான பயிற்சிகளை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதாகவும், தேங்காய் தண்ணீர் தனது அன்றாட உணவில் தவறாமல் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளார். பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரைகள், பச்சை காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் கொட்டைகளில் உள்ள அத்தியாவசிய கொழுப்புகள் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குவதாகவும், வயதை பற்றி கவலைப்படுவதில்லை என்றும், ஆனால் உடற்பயிற்சியை தொடர்ந்து முக்கியமாக கருதி தவறாமல் செய்து வருவதாகவும் காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading