சினிமாவில் அறிமுகமாகும் ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டத்தை வென்ற அழகி ரெஹா சிங்கா !

தெலுங்கு சினிமாவில் தற்போது உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘ஜெட்லி’. இந்த படத்தை, ‘மாத்து வடலாரா’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களை இயக்கிய இயக்குநர் ரித்தேஷ் ராணா இயக்கி வருகிறார். தெலுங்கு சினிமாவில் காமெடி நடிகராக பரவலாக அறியப்படும் சத்யா, இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக, 2024 ஆம் ஆண்டுக்கான ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டத்தை வென்ற அழகி ரெஹா சிங்கா அறிமுகமாகிறார். இதன் மூலம் அவர் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார். மேலும், ‘வெண்ணிலா கபடி குழு’ புகழ் நடிகர் கிஷோர் மற்றும் நடிகர் அஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளராக கால பைரவா பணியாற்றி வருகிறார்.

ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, சுஷ்மிதா சென், லாரா தத்தா, சுமன் ராவ் ஆகியோர் அழகிப் போட்டிகளிலிருந்து சினிமாவிற்கு வந்தவர்களின் வரிசையில், தற்போது அழகியான ரெஹா சிங்காவும் இணைந்துள்ளார். அவரது அறிமுகம் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading