2026 சங்கராந்தி பண்டிகை வெளியீடாக தெலுங்கில் பிரபாஸ், சிரஞ்சீவி ஆகியோரின் படங்கள் ரிலீசுக்கு தயாராக நிற்கின்றன. மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராஜா சாப் திரைப்படம் வரும் ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் நிதி அகர்வால் ,மாளவிகா மோகனன், ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர், தமன் இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் தற்போது மூன்று மணி நேரத்தில் புதிய அப்டேட்டாக படத்தின் நீளம் கிட்டத்தட்ட 15லிருந்து 20 நிமிடங்கள் வரை குறைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

