விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ டிரைலர் 24 மணி நேரத்தில் 34.2 மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனையைப் படைத்தது. அந்த சாதனையை நேற்று வெளியான ‘பராசக்தி’ டிரைலர் தற்போது முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது. 24 மணி நேரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி டிரைலர் 40 மில்லியன் பார்வைகளை ‘ரியல் டைம்’மில் பெற்றுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

