பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற விக்ரமன் தற்போது ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவரது ஜோடியாக சுப்ரிதா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ஜென்சன் திவாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை, கோல்டன் கேட் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் திலகவதி கரிகாலன் தயாரிக்கிறார். பிரீத்தி கரிகாலன் இயக்குகிறார். அஜீஷ் அசோகன் இசை அமைக்கிறார், ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

