விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தின் ‘ராவண மவன்டா’ பாடல் வெளியானது!

இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. இந்த படம் பொங்கல் பண்டிகை வெளியீடாக வரும் 9ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், விஜயின் முக்கியமான படமாக ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூவும் இடம்பெற்றுள்ளார். மேலும், நடிகர் விஜய் தீவிர அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில், அவர் நடிக்கும் கடைசி திரைப்படம் இதுவாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதில் பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத். சமீபத்தில், ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் புக்கிட் ஜலில் மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6.45 மணிக்கு தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. மேலும், தமிழகத்தில் ‘ஜனநாயகன்’ படத்தின் முன்பதிவு வரும் 4ஆம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்தின் ‘ராவண மவன்டா’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. வெளியான லிரிக்கல் வீடியோவில், விவேக் எழுதிய பாடல் வரிகளுடன் மலேசியாவில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவின் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading