மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால். 300க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இப்போதும் அவரது படங்கள் வசூலை குவித்து வருகின்றன. இவரது தாயார் சாந்தகுமாரி (90) நேற்று உடல்நல குறைவால் (டிச., 30) காலமானார். தாயார் சாந்தகுமாரி மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

