சூர்யா – ஜீத்து மாதவனின் படத்தின் தலைப்பு இதுதானா? வெளியான நியூ அப்டேட்!

மலையாள இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் புதிய படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை சூர்யாவின் ழகரம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை நஸ்ரியா இந்தப் படத்தின் மூலம் சூர்யாவுடன் இணைந்துள்ளார். படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு ‘சீனு’ என்ற தலைப்பு வைக்கப்படலாம் என்ற தகவல் சினிமா வட்டாரங்களில் பரவி வருகிறது. சூர்யா இதில் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பதாகவும், அவரது கதாபாத்திரத்தின் பெயர் சீனிவாசன் என்பதால் அதிலிருந்து ‘சீனு’ என்ற தலைப்பு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ள நிலையில், வசனங்களை திராவிட் செல்வம் எழுதியுள்ளார். தற்போதைய திட்டப்படி, இந்தப் படத்தை தீபாவளி வெளியீடாக திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add a Comment

Leave a Reply