நடிகர் கிருஷ்ணாவின் 25-வது திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் படத்திற்கு ‘மர்டர் இன் டவுன்’ (Murder In Town) என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் படத்தின் முதல் மற்றும் இரண்டாவது போஸ்டர்களை வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வெளியான போஸ்டர்களில் கிருஷ்ணா நரைத்த முடியுடன், காக்கி உடையில் தீவிரமான காவல்துறை அதிகாரியாக காட்சியளிக்கிறார். சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் அவரது தோற்றம் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பாலகிருஷ்ணன் எழுதி இயக்குகிறார். இவர் கடந்த ஆண்டு ஜி.வி. பிரகாஷ் நடித்த ‘ரெபெல்’ படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியவர். தயாரிப்பாளர்களாக மகேந்திரராஜ் சந்தோஷ்குமார் மற்றும் கருணாநிதி வேலப்பன் இணைந்துள்ளனர். இசையை கிரண் சூரத் என் அமைக்கிறார். ஒளிப்பதிவை கோபால் கிருஷ்ணன் கவனிக்க, படத்தொகுப்பை கவின் ஆதித்யா மேற்கொள்கிறார். கலை இயக்குநராக வெங்கட் பாலா பணியாற்றுகிறார்.
