நடிகர் ஸ்ரீமன் சமீபத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இப்போதுதான் ஜனநாயகன் இசைவெளியீட்டு விழாவில் இருந்து வந்தேன். என்னுடைய கடைசி படம் ஜனநாயகன் தான் என விஜய் மைக்கில் கூறியபோது என்னை அறியாமலேயே கண்களில் கண்ணீர் வடிந்தது. நெகிழ்ச்சியான தருணம் அது, முகம் கழுவுவதற்காக எழுந்து சென்று விட்டேன். விஜிமா உன்னுடைய கடின உழைப்பு நிச்சயம் உன்னுடைய கனவுகளை எட்டுவதற்கு நிச்சயம் உதவும் அதற்காக எங்கள் பிரார்த்தனைகள் என்றும் உண்டு என கூறியுள்ளார்.

