ராம் சரணின் ‘பெத்தி’ படத்தில் இதுவரை தான் நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ஜகபதி பாபு!

‘கேம் சேஞ்சர்’ படத்திற்கு பிறகு, நடிகர் ராம் சரண் தற்போது ‘பெத்தி’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். காதல் திரைப்படமான ‘உப்பெனா’ மூலம் இயக்குனராக அறிமுகமான புச்சி பாபு சனா இந்த படத்தை இயக்கி வருகிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி இணையத்தில் வைரலானது. பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில், நடிகர் சிவ ராஜ்குமார், ‘மிர்சாபூர்’ தொடரின் மூலம் பிரபலமான திவ்யேந்து மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் ஜகபதி பாபுவின் அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இதில் அவர் ‘அப்பலசூரி’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் 27ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading