இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘பராசக்தி’. இந்த திரைப்படம் 1965ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடைபெற்ற ஹிந்தி திணிப்பு சம்பவங்களை மையமாகக் கொண்டு கதைக்களம் அமைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் 2026ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஏற்கனவே இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை முதலில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்த திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியானது.
ஆனால் தற்போது சில காரணங்களால், ‘பராசக்தி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகின்ற ஜனவரி 3ஆம் தேதி மாலை வேளையில் சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடத்த முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
