இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் நடிகர்கள் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஹிந்தி திணிப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம், அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், ‘வேர்ல்ட் ஆப் பராசக்தி’ என்ற தலைப்பில் ஒரு புதிய வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் இயக்குநர் சுதா கொங்கரா, நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். குறிப்பாக, இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ‘செழியன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற தகவலும் இந்த வீடியோ மூலம் வெளியாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
