யஷ்-ன் டாக்சிக் படத்தில் ‘எலிசபேத்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஹுமா குரேஷி !

‘கேஜிஎப் 2’ திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் யஷ் நடித்து வரும் பான் இந்தியா திரைப்படம் ‘டாக்சிக்’. இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கும் இந்த திரைப்படத்தில் நடிகை ருக்மணி வசந்த், நடிகை நயன்தாரா, நடிகை ஹுமா குரேஷி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படம் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் வெளியீட்டு தேதி 2026ஆம் ஆண்டு மார்ச் 19 என்று தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது இந்த திரைப்படத்தில் நடிகை ஹுமா குரேஷி ‘எலிசபெத்’ என்ற பெயருடைய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக படக்குழு ஒரு புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading