எதனாலும் என் தன்னம்பிக்கையை உடைக்க முடியாது – நடிகை வர்ஷினி வெங்கட்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு குறுகிய காலத்திலேயே பெரும் ரசிகர் ஆதரவை பெற்றவர் வர்ஷினி வெங்கட். அவர் அதிக நாட்கள் போட்டியில் நீடிக்கவில்லை என்றாலும், இருந்த காலம் முழுவதும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தனது பங்களிப்பை வழங்கினார். அவரது வெளிப்படையான அணுகுமுறையும் தன்னம்பிக்கையும் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தில் வர்ஷினி வெங்கட் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தொடர்ந்து கிடைத்த திரைப்பட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘சொட்ட சொட்ட நனையுது’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மூலம் அவரின் நடிப்பிற்கு மேலும் கவனம் கிடைத்துள்ளது.

திரைப்படங்களில் மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் வர்ஷினி வெங்கட் மிகச் செயல்பாட்டுடன் இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களுடன் கூடிய ஒரு பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பதிவில், “எதனாலும் என் தன்னம்பிக்கையை உடைக்க முடியாது” என்று தலைப்பு வைத்து தனது மன உறுதியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த பதிவு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading