விருதுநகர் மாவட்ட பொதுமக்கள் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜூக்கு சிவகாசியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு விருதுநகர் மாவட்ட மாரி செல்வராஜ் நற்பணி இயக்கம் மாவட்ட தலைவர் மான்ராஜன் வரவேற்றார். விழாவில் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை இயக்குனர் மாரி செல்வராஜ் வழங்கினார்.

விழாவில் பேசிய அவர், அடுத்த படத்திற்கான கதைகளை தீவிரமாக எழுதி வருவதாகவும், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை உடனடியாக பூர்த்தி செய்ய முடியுமா என்ற தயக்கம் இருப்பதாகவும் கூறினார். தான் அரசியலில் இல்லை என்றும், எதற்காகவும் சமரசம் செய்ய மாட்டேன் என்றும் தெரிவித்தார்.
அதேபோல் அரசியல் குறித்த பேசுகையில், தற்போது நான் அரசியலில் இல்லை. எதிர்காலத்தில் அரசியல் இயக்கம் தொடங்கினால், அது சாதிக்கு எதிரான இயக்கமாகவே இருக்கும் என்றும் அவர் கூறினார்.
