நடிகை கோமலி பிரசாத் கதாநாயகியாக நடித்துள்ள ‘மண்டவெட்டி’ திரைப்படம் சூப்பர் நேச்சுரல் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கியிருக்கும் இப்படம், அமானுஷ்ய குற்றங்களையும் நாட்டுப்புற நம்பிக்கைகளையும் இணைத்து, அறியப்படாத பல மர்மங்களை திரைக்கதைக்குள் கொண்டு வந்துள்ளது.
படத்தின் முக்கிய மர்மமாக ‘செஞ்சி சாமி’ என்ற சக்தி இடம்பெற்றுள்ளது. அந்தப் பகுதியைச் சுற்றி நடைபெறும் வினோதமான சம்பவங்களுக்கும் இந்த மர்ம சக்திக்கும் தொடர்பு இருப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. செஞ்சி எனப்படும் சக்திவாய்ந்த உள்ளூர் தெய்வத்தைப் பற்றிய பழமையான தொன்மக் கதைகளிலிருந்து இப்படத்தின் மையக்கரு உருவானதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
படத்தின் ஒளிப்பதிவை பிரகாஷ் மனிதன் மேற்கொண்டுள்ள நிலையில், தீபக் வேணு கோபால் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், கதையின் மர்மத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, ‘மண்டவெட்டி’ என்ற தலைப்புக்கும் படத்தின் கதைக்கும் இருக்கும் தொடர்பு என்ன என்பது ரசிகர்களுக்கான சஸ்பென்ஸாகவே வைக்கப்பட்டுள்ளது.
