மீண்டும் இணையும் சுந்தர் சி – விஷால் கூட்டணி… விரைவில் வெளியாகவுள்ள முக்கிய அப்டேட்!

சுந்தர்.சி இயக்கத்தில் மதகஜராஜா, ஆம்பள என 2 படங்களில் விஷால் நடித்துள்ளார். இதில் ‘மதகஜராஜா’ 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியானாலும் பெரிய வெற்றி பெற்றது. ‘ஆம்பள’ ஓகே ரகம். தற்போது இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைகிறது. இந்த படத்திற்கு சுந்தர்.சியின் ராசியான இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இசையமைக்க, அவரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான அவ்னி தயாரிக்கிறது. விரைவில் படத்தலைப்பு மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

இதுகுறித்து சுந்தர்.சி, விஷால், ஹிப் ஹாப் ஆதி இணைந்த புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இந்த கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளது. 

தற்போது சுந்தர்.சி ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை இயக்கி வருகிறார். விஷால், தான் இயக்கி நடிக்கும் ‘மகுடம்’ படத்தில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் சுந்தர் சி – விஷால் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகி யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், கயாடு லோஹர் இருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading