‘ஜன நாயகன்’ பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தானா? கதைக்களம் என்ன?

2023ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பகவந்த் கேசரி’. பெண் குழந்தைகளை தைரியமாகவும், சிங்கக்குட்டிகளைப் போல தன்னம்பிக்கையுடன் வளர்க்க வேண்டும் என்பதே இப்படத்தின் மையக் கருத்தாக அமைந்தது. ராணுவத்தில் சேர வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் ஸ்ரீலீலாவுக்கு, கதாநாயகன் பாலகிருஷ்ணா எந்த விதத்தில் துணையாக நிற்கிறார், வில்லன் தீட்டும் சதிகளை அவர் எப்படி முறியடிக்கிறார் என்பதையே இப்படத்தின் கதை விவரிக்கிறது.

இதுபோலவே ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் கருவும் அதே கோணத்தில் அமைந்துள்ளது. இதில் ஸ்ரீலீலா கதாபாத்திரத்திற்கு பதிலாக மமிதா பைஜூ நடித்துள்ளார். வில்லன் வேடத்தில் பாபி தியோல் தோன்றுகிறார். காஜல் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படத்தின் கிளைமாக்சில், பெண் குழந்தைகளின் திறமை மற்றும் ஆற்றலை வலியுறுத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதன் காரணமாகத்தான் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் மமிதா பைஜூவை புகழ்ந்து பேசிய விஜய், அவர் அனைத்து குடும்பங்களாலும் பாராட்டப்படக்கூடிய நடிகையாக இருப்பார் என குறிப்பிட்டார்.

தமிழ் ரசிகர்களுக்கேற்ற வகையில் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜயின் கடைசி படம் ஒரு தெலுங்கு ரீமேக் படமாக அமைந்தது. பெண்களை ஈர்க்கும் காட்சிகளும், பெண்கள் விரும்பும் கதையம்சமும் இதில் இருப்பதால், தனது அரசியல் பயணத்தை கருத்தில் கொண்டு இந்த கதையை தேர்வு செய்து விஜய் நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading