2019ஆம் ஆண்டு வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரியோ ராஜ், தொடர்ந்து ‘பிளான் பண்ணி பண்ணனும்’, ‘ஜோ’, ‘ஸ்வீட் ஹார்ட்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கினார். சமீபத்தில் வெளியான ‘ஆண்பாவம் பொல்லாதது’, ‘ராம் இன் லீலா’ ஆகிய படங்களும் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தன.
இதையடுத்து ரியோ ராஜ் நடிக்கும் 7வது படத்தின் அறிவிப்பு வெளியானது. அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் பிகே இயக்கும் இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். ‘மேடி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு, லோகேஷ் கனகராஜ், சூரி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.
தற்போது படத்தின் பணிகளில் முக்கிய கட்டம் நிறைவடைந்துள்ளது. ‘மேடி’ படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து படத்தின் அடுத்தகட்ட பணிகள் விரைவில் நடைபெறவுள்ளன.
—
