ரசிகர்களின் வரவேற்பை பெற்ற மம்முட்டி – அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘பாதயாத்திரா’ டிரெய்லர்!

மம்முட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பேட்ரியாட்’ திரைப்படம் விமர்சன ரீதியாக கலவையான கருத்துகளை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக வெற்றியைப் பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து மலையாள சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான அடூர் கோபாலகிருஷ்ணனுடன் மம்முட்டி மீண்டும் இணைந்துள்ளார்.

‘அனந்தரம்’, ‘மதிலுகள்’, ‘விதேயன்’ உள்ளிட்ட அடூரின் படங்களில் ஏற்கனவே மம்முட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் ‘பாதயாத்திரா’ படத்தை மம்முட்டி நடிப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார். இந்திரன்ஸ், கிரேஸ் ஆண்டனி உள்ளிட்டோரும் இதில் நடித்துள்ளனர்.

கேரளாவின் காக்கநாடு பகுதியில் நடைபெற்றுவந்த படப்பிடிப்பு சமீபத்தில் முழுமையாக முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ‘பாதயாத்திரா’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. மலைப்பகுதி கிராமத்தில் மருத்துவராக வாழும் மம்முட்டிக்கும் அங்குள்ள மக்களுக்கும் இடையே உருவாகும் உறவை மையமாகக் கொண்ட கதையாக இப்படம் உருவாகியுள்ளது. இதன் பின்னணியையும் கதாபாத்திரங்களையும் வெளிப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading