பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ படத்தின் 2.0 ட்ரெய்லர் வெளியீடு!

இந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் பிரபாஸ், தற்போது ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த ஹாரர்-நகைச்சுவை திரைப்படத்தை இயக்குனர் மாருதி இயக்கியுள்ளார். பீப்பிள் மீடியா பேக்Prabhas’ ‘The Raja Saab’ 2.0 trailer released!டரி தயாரித்துள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

மேலும், சஞ்சய் தத், போமன் இரானி, ஜரினா வஹாப் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ‘தி ராஜா சாப்’ திரைப்படம் தமிழில் ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளது. மற்ற மொழிகளில் ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இதற்கிடையில், ஏற்கனவே இந்த படத்தின் முதல் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல கவனத்தை பெற்ற நிலையில், தற்போது ‘தி ராஜா சாப் 2.0’ என்ற பெயரில் இரண்டாவது டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த புதிய டிரெய்லர் இணையத்தில் வைரலாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading