ரம்யா கிருஷ்ணனின் 55-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘டேவிட் ரெட்டி’ படத்தில் அவரது கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் சிறப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் அவர் ‘கமலா ரெட்டி’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பது தெரியவந்துள்ளது. எதிரிகளை வீழ்த்திய பின்னர் சிம்மாசனத்தில் அமர்ந்தபடி, கையில் வாளுடன் ரம்யா கிருஷ்ணன் காட்சியளிக்கும் இந்த போஸ்டர் அவரது கதாபாத்திரத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சு மனோஜ் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை ஹனுமா ரெட்டி யக்கந்தி இயக்குகிறார். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தை பின்னணியாக கொண்ட அதிரடி கதைக்களத்தில் உருவாகும் ‘டேவிட் ரெட்டி’ படத்தில் மரியா ரியா போஷாப்கா கதாநாயகியாக நடிக்கிறார். ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார்.
படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் ரம்யா கிருஷ்ணனின் தோற்றம் வழக்கமான கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதால், இந்த வேடம் அவரது திரைப்பயணத்தில் நினைவில் நிற்கும் கதாபாத்திரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
