‘ஜன நாயகன்’ திரைப்படம் ஒரு சம்பவமாக இருக்கும் – இசையமைப்பாளர் அனிருத் | JanaNayagan Audio Launch

விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவின் புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த விழாவில் இசையமைப்பாளர் அனிருத் பேசுகையில், எனக்கு 21 வயதாக இருந்த போது, நான் இரண்டு படங்களுக்கு மட்டுமே இசையமைத்திருந்தேன். அப்போது என்னை முழுமையாக நம்பி, விஜய் சார் ‘கத்தி’ படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை கொடுத்தார். அப்போதே அவர் மிகப் பெரிய நடிகராக இருந்தார். அந்த வாய்ப்பிற்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

‘கத்தி’, ‘மாஸ்டர்’, ‘பீஸ்ட்’, ‘லியோ’ என நாம் சேர்ந்து பணியாற்றிய அனைத்து படங்களின் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டாகின. இப்போது ‘ஜன நாயகன்’ ஆல்பமும் நிச்சயம் ஹிட்டாகும்.நான் பல கான்சர்ட்களுக்கு சென்றிருக்கிறேன். ஆனால், இதுபோன்ற ஒரு எனர்ஜியை எங்கும் பார்த்ததில்லை. அது தளபதி ஒருவருக்காக மட்டுமே என கூறிய அவர், “ஜன நாயகன் சம்பவமாக இருக்கும் என்று உற்சாகமாக பேசினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading