இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள அவரின் கடைசி திரைப்படமான ‘ஜன நாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவின் புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

இந்த இசை வெளியீட்டு விழா மேடையில் நடிகர் நாசர் பேசுகையில், அமைதியும் பணிவையும் தவிர, கூர்மையான ஆயுதம் எதுவும் கிடையாது. அதுதான் உங்களின்(விஜய்)உண்மையான அடையாளம்.
படுக்கை படுக்கையாக இருந்த என்னுடைய மகனை எழுந்து நடக்க வைத்தது நீங்கள்தான். இதை பொது வெளியில் அடிக்கடி சொல்ல வேண்டாம் என்று நீங்கள் சொல்லியிருந்தாலும், அதை சொல்ல வேண்டியது என்னுடைய கடமை. இந்த மேடையில் மட்டும் அல்ல, இனி பல மேடைகளிலும் இதை நான் சொல்லுவேன். நடிகர் சங்கத்திற்கு நிதியுதவி தேவைப்பட்ட போது நிதியுதவி கொடுத்தீர்கள். நீங்கள் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும். இது எங்களுடைய மனமார்ந்த வேண்டுகோள். என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.
