சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய நடிகர் அஸ்வின், கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன் என அன்று பேசியதற்கு வருந்தினார். அவர் பேசுகையில்,’நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் யாருடைய வாழ்க்கையையும் கெடுக்கவில்லை, ஆனாலும் அந்தச் சம்பவத்திற்குப் பிறகு பலர் என்னைப் பற்றி மிகவும் மோசமாக விமர்சித்தார்கள்.மனிதநேயம் என்பதே இல்லை என்று எனக்குத் தோன்றியது. அது இன்றும் என்னை வாட்டுகிறது, கடைசி வரை அந்த புண் என்னுடன் இருந்துகொண்டே தான் இருக்கும். அது போகவே போகாது’ என்றார். இது தற்போது வைரலாகி வருகிறது.

