நடிகர் மாஸ்டர் மகேந்திரன் சமீபத்திய பேட்டி ஒன்றில், நான் திருமணம் செய்யவில்லை. இப்போதைக்கு வேண்டாம் என நினைக்கிறேன். என் போராட்டங்கள் முடிவடைந்து வெற்றி பெற்றவுடன் திருமணம் செய்வேன். ஒரு பொண்ணை திருமணம் செய்து, அவரை கஷ்டப்படுத்தக்கூடாது. தியேட்டர் வெற்றிக்காக காத்திருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு என்னை வைத்து படம் தயாரிக்க வந்தவர்களிடம் அவனுக்கு மார்க்கெட் இல்லையே என சிலர் சொன்னார்கள். அதை மீறி உழைக்கிறேன்” என்றார்.

