வார் 2 எதிர்ப்பார்த்த வசூலை தரவில்லை – தயாரிப்பாளர் நாக வம்சி!

தெலுங்கு சினிமாவின் பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனம் சித்தாரா என்டர்டெயின்மெண்ட். பல வெற்றி படங்களை தயாரித்துள்ளது. இந்நிறுவனத்தை நிர்வகித்து வரும் தயாரிப்பாளர் நாக வம்சி, ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன், ஜுனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான வார் 2 படத்தை தெலுங்கில் வெளியிட்டார். ஆனால் இந்தப்படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை.இதுபற்றி நாக வம்சி தற்போது அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்தாண்டில் ‘வார் 2’ படத்தை ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ரூ. 68 கோடிக்கு வாங்கி விநியோகம் செய்தோம். ஆனால், எங்களுக்கு ரூ. 40 முதல் 45 கோடி தான் கைக்கு வந்தது. யஷ் ராஜ் பிலிம்ஸ் மீதமுள்ள ரூ. 18 கோடி பணத்தை திரும்பி தந்தனர் என கூறினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading