நீலாம்பரி போன்ற கதாபாத்திரங்கள் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் – நடிகை நமீதா!

சமீபத்தில் தேனியில் நடைபெற்ற ஒரு நகைக்கடை திறப்பு விழாவில் நடிகையும் அரசியல் பிரமுகருமான நமீதா கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் தனக்கு இருப்பதாக தெரிவித்தார்.

அதே நேரத்தில், ‘படையப்பா’ திரைப்படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் போல, காலம் கடந்தும் மக்கள் பேசும் வகையிலான ஒரு வலிமையான கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். சாதாரணமான வேடங்களில் நடிப்பதை விட, நினைவில் நிற்கும் கதாபாத்திரங்கள் தான் தன்னை ஈர்க்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும், பாலிவுட் நடிகைகள் வித்யா பாலன் மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் தேர்வு செய்யும் கதாபாத்திரங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அவர்களை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டு எதிர்காலத்தில் கதாபாத்திரங்களை தேர்வு செய்ய விரும்புவதாகவும் நமீதா கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading