கன்னட நடிகர் சுதீப், விஜயின் அரசியல் வருகை குறித்து தனது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், “சில நடிகர்கள் சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் அரசியலுக்கு செல்கிறார்கள். ஆனால் சிலர் மார்க்கெட்டில் இருக்கும்போதே அரசியலுக்கு செல்கிறார்கள். இது ரொம்ப பெரிய விஷயம்.

அதாவது சமூகத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் அக்கறையே இதற்கான காரணம். அதனால் நடிகர் விஜய் போன்றவர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்க வேண்டும். அவர் அரசியலில் வெற்றி பெற்றால், கண்டிப்பாக மக்களுக்கு நன்மை செய்வார் என நான் நம்புகிறேன்” என குறிப்பிட்டார்.
தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகர் சுதீப், விஜய் நடித்த ‘புலி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
