ஆதித்ய தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியான படம் ‘துரந்தர்’. இதில் அக்சய் கண்ணா, சஞ்சய்தத், மாதவன், சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 300 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் இதுவரை 21 நாளில் ரூ.1006.7 கோடி வசூலித்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 789.18 கோடி, உலகளவில் 217.5 கோடி வசூலாகியுள்ளது.

இந்த ‘துரந்தர்’ படத்தின் இரண்டாம் பாகம் 2026ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நெட் பிளிக்ஸ் நிறுவனம் இந்த படத்தை 285 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா -2’ படத்தின் ஓடிடி உரிமை 270 கோடிக்கு விற்பனையான நிலையில், இப்போதும் துரந்தர் படம் அதிக தொகைக்கு விற்பனையாகி, இந்திய அளவில் ஓடிடியில் விற்பனையான படங்களில் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட முதல் படம் ஆகியுள்ளது.
