‘அர்ஜுன் ரெட்டி’, ‘இட்லி கடை’ உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை ஷாலினி பாண்டே, விலங்குகள் நல அமைப்பான பீட்டாவின் உறுப்பினராக இருந்து வருகிறார். சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற “நாய்களை தத்தெடுங்கள், விலைக்கு வாங்காதீர்கள்” என்ற பீட்டா அமைப்பின் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய ஷாலினி பாண்டே, “எனது செல்ல நாய்க்குட்டியின் பெயர் பிர். 2021ஆம் ஆண்டு ஹிமாச்சலில் இருந்து அதை காப்பாற்றி கொண்டு வந்து வளர்த்து வருகிறேன். நாய்களுடன் பழகிய இந்த சில ஆண்டுகளில், நான் மேலும் மனிதநேயமுள்ள ஒருவராக மாறியிருக்கிறேன்” என்று கூறினார்.
மேலும், உயர்ந்த ரக நாய்களை அதிக விலைக்கு வாங்குவதற்கு பதிலாக, தெருவில் வாழும் நாய்களை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என அவர் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
