சினிமாவில் 13 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நடிகர் விக்ரம் பிரபுவிடம் சமீபத்தில் ஒரு நேர்காணல் நடந்தது. அதில் சிறை படத்தை தேர்ந்தெடுக்க காரணம் என்ற கேட்கப்பட்ட கேள்விக்கு அவர், கதை தான் காரணம் என்றார். அது மிகவும் நேர்மையாக இருந்தது. போலீஸ் அமைப்பு, சமூகத்தின் பார்வை, மனித உணர்வுகள் எல்லாம் மிக நுட்பமாக சொல்லப்பட்டிருந்தது.

அதேபோல் சிறை controversial படம் அல்ல. ஆனால் இது கேள்விகள் கேட்கும் படம். ஒவ்வொருவரும் இதில் இருந்து தங்களுக்கு ஏற்ற ஒரு விஷயத்தை எடுத்துச் செல்ல முடியும்.
இந்த படத்தில் நடித்தது ஒரு பெரிய அனுபவம். உடல் மாற்றம் மட்டுமல்ல, மனநிலையும் மாற வேண்டும். Body language, Discipline, Mentality இவை எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அது வாழ்க்கையிலும் பயன்படும் பாடங்கள் என்றுள்ளார்.
