தமிழ், தெலுங்கு சினிமாவைத் தாண்டி இந்தியிலும் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், தற்போது தமிழில் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கும், இந்தியில் ஷாருக்கானின் ‘கிங்’ படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

இவ்வளவு பிஸியான தொழில்வாழ்க்கையுடன் இருந்தாலும், அனிருத் இன்னும் திருமணம் செய்யாமல் சிங்கிளாகவே இருக்கிறார். அவரது திருமணம் எப்போது என்ற கேள்வி ரசிகர்களிடையே நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அனிருத்தின் தந்தை ரவி ராகவேந்திரா இதுகுறித்து பேசுகையில், இன்றைய காலத்தில் பல இளைஞர்கள் பெற்றோரிடம் வந்து பெண் பார்க்கச் சொல்லுவதில்லை என்றும், திருமணம் செய்வதாக மட்டும் கூறிவிட்டு முடிவுகளைத் தாங்களே எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். அனிருத் எப்போது திருமணம் குறித்து சொல்லப் போகிறார் என்பதை காலமே தீர்மானிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
