திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள தனுஷ், தனது திறமையை நடிப்பை தாண்டி பின்னணி பாடகராகவும், பாடலாசிரியராகவும், இயக்குநராகவும் ஜொலித்து வருகிறார். அவர் நடித்து, இயக்கும் 50 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது, இதற்கு ராயன் எனப் பெயரிட்டுள்ளனர்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/05/1000000757-655x1024.jpg)
ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது மற்றும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், மே 24 அன்று படத்தின் அடுத்த பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்த பாடல் கானா வகையைச் சேர்ந்ததாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.ராயன் படத்தின் இரண்டாவது பாடலின் வெளியீட்டை அறிவிக்கும் போஸ்டரில் சந்தீப் கிஷன் மற்றும் அபர்ணா பாலமுரளி சைக்கிளில் செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/05/1000000758-655x1024.jpg)