Saturday, September 14, 2024

ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த ஜெயம் ரவியின் ‘பிரதர்’ கிளிம்ஸ் வீடியோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘ப்ரதர்’ படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் வெளியான இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கிறது. ப்ரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், ‘கேஜிஎஃப்’, ‘புஷ்பா’ புகழ் பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்துக்குப் பிறகு இயக்குநர் ராஜேஷும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் மீண்டும் இணைந்துள்ளதால் ‘ப்ரதர்’ படத்தின் பாடல்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒளிப்பதிவை விவேகானந்த் சந்தோஷம் கையாளுகிறார். குடும்ப கதையம்சம் கொண்ட படமாக இது இருக்கும் என தெரிகிறது. இந்நிலையில் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

38 நொடிகள் மட்டுமே ஓடும் வீடியோவில், பின்னணியில் பாடல் ஒலிக்க திருமண நிகழ்வில், ப்ரியங்கா மோகன் நடனமாடுவது போல காட்சியளிக்கிறது. மேலும், ஜெயம் ரவியும் இடம்பெற்றுள்ள இந்த வீடியோ ஹாரிஸ் ஜெயராஜின் ‘கம்பேக்’ எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News