Monday, November 4, 2024

ஆரஞ்சு நிற நீச்சல் உடையில் கிளாமராக போஸ்… ரசிகர்களை இம்சை செய்த நமீதா மாரிமுத்து!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரசிகர்களின் அதிகமான ஆதரவை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் முதல் திருநங்கை போட்டியாளராக நமீதா மாரிமுத்து கலந்து கொண்டார். அவர் பேஷன் ஷோ மற்றும் மாடலிங் துறைகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். 

தாய்லாந்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான ‘மிஸ் இண்டர்நேஷனல் குயின் – 2022’ போட்டியில் கலந்து கொண்டு ‘மோஸ்ட் பாப்புலர் வோட்’ என்ற விருதை பெற்றார். மேலும், திருநங்கைகளுக்கான பல அழகி போட்டிகளில் கலந்து கொண்டு பல விருதுகளையும் வென்றுள்ளார். மாடல் அழகியாக மட்டும் இல்லாமல், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக, சமுத்திரகனி இயக்கிய நாடோடிகள் படத்தில் நடித்துள்ளார், மேலும், ஒரு பாடலும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நமீதா மாரிமுத்து தற்போது சமூக ஊடகங்களில் மிகச் சுறுசுறுப்பாக செயல்படுகிறார். விதவிதமான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார். சமீபத்தில், அவர் நீச்சல் உடையில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார், இதை பார்த்து “அட, இப்படி கவர்ச்சி காட்டுகிறாரே!” என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News