அமேசான் ஓடிடி தளத்தில் வெளிவந்த ‘ஸ்வீட் காரம் காபி’ என்ற தொடரின் மூலம் தமிழில் அறிமுகமானார் சாந்தி. தேசிய விருது பெற்ற கிரிஷாந்தின் ‘தி க்ரோனிகல்ஸ் ஆப் தி 4.5 கேங்’ என்ற படத்தில் சாந்தி அடுத்து நடிக்கவுள்ளார். இப்போது முரளி கோபியின் திரைக்கதையில், ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில், மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பில், நடிகர் ஆர்யா நடித்து வரும் மலையாளம்-தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், சாந்தி திரைக்கதை எழுத்தாளராக மாறியுள்ளார். நடிகர் துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேபேரர் பிலிம்ஸ் தயாரிக்க உள்ள அடுத்த திரைப்படத்திற்கான திரைக்கதையை சாந்தி எழுதியுள்ளார்.
எழுத்தாளரும் இயக்குநருமான டொமினிக் அருண் இயக்கத்தில், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் நடிக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. தொடர்ந்து, சாந்தி அடுத்ததாக படத்தை இயக்கும் திட்டத்தில் இருக்கிறார்.