சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா தன்னுடைய தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் கொண்டவர். தனது சின்னத்திரை வாழ்க்கையை டான்ஸராக ஆரம்பித்த அவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியலின் மூலம் தமிழ் நாடு முழுவதும் பிரபலமானார்.
திருமணத்திற்குப் பிறகு குழந்தைகள் மற்றும் குடும்ப பொறுப்புகளுக்காக சில காலம் சீரியல்களில் இருந்து ஓரமாக இருந்தாலும், தற்போது முழு வீச்சில் நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் நடித்து வருவதோடு, சஞ்சய் மற்றும் கயல் தொடரிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார்.
ஆல்யா மானசா மற்றும் அவரது கணவருக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். சமீபத்தில், ரூபாய் 1.8 கோடி செலவில் ஸ்டார் ஹோட்டல் அளவிற்கு பிரமாண்டமான வீட்டினைக் கட்டி முடித்தனர். இவர்களின் வீட்டின் ஹோம் டூர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது, இனியா சீரியலின் படப்பிடிப்புத் தளத்தில் ஆல்யா மானசா தனது மகனை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் மகனுக்கு முத்தம் கொடுத்து, தன்னைப் போல போஸ் கொடுக்கச் சொல்லியும் விளையாடி மகிழ்ந்தார். அவரது மகனும் அவரைப் போலவே போஸ் கொடுத்து மகிழ்ந்தார்.