Tuesday, September 17, 2024

ரக்ஷன்-க்கு திருப்புமுனையாக அமையுமா வேட்டையன் திரைப்படம்? #VETTAIYAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில், குறிப்பாக விஜய் டிவி போன்ற சின்னத்திரை வாயிலாக பலர் வெள்ளித்திரையில் நுழைந்து, நகைச்சுவை நடிகர்களாகவும், ஹீரோவாகவும் தங்களுக்கென ஒரு தனிப்பட்ட இடத்தை உருவாக்கிக் கொண்டு வருகின்றனர். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக சந்தானமும் சிவகார்த்திகேயனும் கூறலாம். அவர்களுக்கு பிறகு, தற்போது கவினும் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருகிறார்.

அதேபோல், விஜய் டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தொகுப்பாளராக இருந்த ரக்ஷன், சில வருடங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நண்பராக வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அவரது நகைச்சுவை கலந்த நடிப்பும் ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டது. ஆனால், இதன் பின்பு தொடர்ந்து படங்களில் பிஸியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டாலும், கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் மறக்குமா நெஞ்சம் என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார். தற்போதைய நிலையில், ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் வேட்டையன் படத்தில் ரக்ஷன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான மனசிலாயோ என்ற பாடல் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலில் ரஜினிகாந்த் மற்றும் மஞ்சு வாரியருடன் இணைந்து, ரக்ஷனும் நடனமாடியுள்ளார், மேலும் அவருக்கு இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த படம் ரக்ஷனின் திரைப்பயணத்தில் ஒரு பெரிய திருப்புமுனையாக மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -

Read more

Local News