Tuesday, May 28, 2024

யுவன் சொன்ன தி கோட் படத்தின் சூப்பரான அப்டேட்… துள்ளி குதிக்கும் ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்ஸ்’ படத்தில் நடித்துள்ளார். இதில் பிரபுதேவா, மோகன், பிரஷாந்த், அஜ்மல், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார்.வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் ‘ரிலீஸ்’ ஆகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். விஜய் முன்னதாக நடித்த சில படங்களில் பாடல்களை பாடியிருந்தார். அதேபோல், ‘GOAT’ படத்திலும் அவர் 2 பாடல்களை பாடியுள்ளார் என்று யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

- Advertisement -

Read more

Local News