Saturday, May 4, 2024

மீண்டும் வரும் அந்நியன்!கொண்டாட தயாரான ரசிகர்கள்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சியான் விக்ரம் என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கும் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டில் வெளியானது அந்நியன் படம். ஷங்கர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான பொருட்செலவில் உருவாகி இருந்த இந்தப் படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்த சூழலில் இந்த படம் வெளியான காலகட்டத்தில் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் கொடுத்து விக்ரம்-க்கு மிகப்பெரிய படமாக அமைந்தது.

அந்நியன் படத்தில் நடிகர் விக்ரம், சதா, பிரகாஷ்ராஜ், விவேக் நடித்து அசத்திருப்பார்கள்.ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மூன்று வெவ்வேறு கெட்டப்களில் விக்ரம் நடித்திருந்தார்.

அந்நியன், ரெமோ மற்றும் அம்பி என அவரது மூன்று கதாபாத்திரத்திங்கள் மற்றும் அதன் மாற்றங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தன. படத்தின் பாடல்களும் பெரும் மவுஸை பெற்றன.

இந்நிலையில் தற்போது இந்த படம் ரசிகர்களுக்காக டிஜிட்டலில் மேலும் மேம்படுத்தப்பட்டு விரைவில் தமிழில் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.இதற்கு முன்பாக வரும் மே 17ம் தேதி அந்நியன் படம் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது தமிழில் அதிகமான படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி வருகின்றன.இப்படி பல சூப்பர் ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் ஆகிவரும் சமயத்தில் அந்நியன் படமும் ரீ ரிலீஸ் ஆகவிருப்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News