Saturday, May 25, 2024

அஜித் படத்தை இயக்குகிறாரா விஜய் பட இயக்குனர்? AK64 அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கத்தில், தற்போது விஜய் நடிக்கவுள்ள தளபதி 69‌ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், கோட் படமும் மங்காத்தா படத்தை இயக்கிய வெங்கட் பிரபுவின் படமாகும், இதில் அஜித் முக்கிய வேடத்தில் நடித்தார்.

இந்நிலையில், விஜய் படத்தை இயக்கிய இயக்குனுறடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டுமென அஜித் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா சமீபத்தில் அஜித்தை சந்தித்து, ஒரு அருமையான கதையை அவரிடம் பகிர்ந்ததாகவும், அஜித்துக்கும் அந்த கதை மிகவும் பிடித்துள்ளது எனவும் கூறப்படுகிறது.

இதனால், அஜித் அடுத்து இவருடன் இணைய முடிவு செய்துள்ளாராம். விஜய்யின் வேலாயுதம் படத்தை இயக்கியவர் மோகன் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.ஏஜிஎஸ் நிறுவனம் மோகன் ராஜா கேட்ட பெரிய பட்ஜெட்டை ஒதுக்க தயங்கியதால், தனி ஒருவன் 2 திரைப்படம் இப்போதைக்கு உருவாகாது என தெரிகிறது.

இதே சமயத்தில், காட்ஃபாதர் படத்தை இயக்கிய மோகன் ராஜா, சிரஞ்சீவியுடன் மீண்டும் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்து அஜித் நடிக்கும் படத்தையும் அவர் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News