Sunday, May 26, 2024

கார்த்தியின் வா வாத்தியார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.அவர் நடித்த 25 ஆவது படமான ஜப்பான், எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.இந்தப் படத்தைத் தொடர்ந்து, கார்த்தி, சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் நடித்துள்ளார்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘கார்த்தி 26’ என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. நாயகியாக கிரித்தி ஷெட்டி நடித்துள்ளார், மேலும் சத்யராஜ் மற்றும் ராஜ்கிரண் போன்ற பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி மும்முரமாக நடந்த நிலையில், தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது. கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று மாலை ‘கார்த்தி 26’ படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘வா வாத்தியார்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

போஸ்டரில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடித்த பல கதாப்பாத்திரங்களில் கார்த்தி காட்சியளிக்கிறார். சிவப்பு நிற கண்ணாடியுடன், வித்தியாசமான போலிஸ் கெட்டப்பில் அவர் தோன்றுகிறார். கார்த்தி எந்த வகையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதை முற்றிலும் தெரியவர, படத்தின் வெளியீட்டை காத்திருக்க வேண்டும்.

- Advertisement -

Read more

Local News